பிரதமர் லீ சியன் லூங் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தேசிய தின பேரணி உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சி அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் நடை பெறும்.
அன்று மாலை 6.45 மணியிலிருந்து 7.30 மணி வரை மலாய், மாண்டரின் மொழியிலும் மாலை 8.15 மணியிலிருந்து 9.30 மணி வரை ஆங்கிலத்திலும் பிரதமர் பேரணி உரை நிகழ்த்துவார் என்று பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்தது.
இது, 16வது தேசிய தின பேரணி உரை நிகழ்ச்சியாகும்.
கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட தமது தேசிய தின செய்தியில் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு கல்வி கட்டுபடியாகக்கூடிய வகையில் வைத்திருப்பது பற்றி பிரதமர் லீ பேசியிருந்தார்.
இதனால் தேசிய தின பேரணியிலும் இதையொட்டியே பிரதமர் விளக்கமாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்டகாலம் தொடர்ந்து வேலை செய்ய விரும்பும் மூத்த சிங்கப்பூரர்களுக்கு உதவ ஓய்வு வயது, மறுவேலை வாய்ப்பு வயது உயர்த்துவதை பற்றியும் பிரதமர் பேசக்கூடும்.
பிரதமரின் உரை உள்ளூர் தொலைக்காட்சியிலும் வானொ லியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
மேலும் பிரதமர் அலுவலக யூடியூப் பக்கம், பிரதமர் லீயின் ஃபேஸ்புக் பக்கம், அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவின் ஃபேஸ்புக் பக்கம், Toggle.sg மற்றும் சேனல்நியூஸ் ஏசியா ஆகியவற்றில் பிரதமரின் உரை நேரடியாக ஒளியேற்றப்படும்.

