ஹாங்காங்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இவ்வேளையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலையத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்குக்குச் செல்லும் ஆறு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. கேத்தே பசிபிக்கின் மூன்று விமானச் சேவைகளும் சிங்கப்பூர் ஏர்லைன்சின் இரண்டு விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஸ்கூட்டும் அதன் மாலை 4.55 மணி விமான சேவையை ரத்து செய்தது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் சாங்கி விமான நிலைய குழுமம் தெரிவித்தது.
முன்னதாக ஹாங்காங்கிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக நேற்று பிற்பகல் ஹாங்காங் அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்குக்குச் செல்லும் விமானங்களும் ரத்து ஆகியுள்ளன.

