கவிழ்ந்த லாரியிலிருந்து முதிய ஓட்டுநரைக் காப்பாற்றிய ஆடவர்

கவிழ்ந்த லாரியிலிருந்து முதிய ஓட்டுநரைக் காப்பாற்றிய ஆடவர்

1 mins read
3ffca87d-1e79-4503-8c85-01be9b5415b0
கவிழ்ந்த லாரியிலிருந்து முதியவரை மீட்கும் ஆடவர். படம்: ரயன் ஹிரோஷி -

பூன் லே வட்டாரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி ஒன்று கவிழ்ந்தது.

கடந்த சனிக்கிழமையன்று பூன் லேவுக்கும் பூன் லே வேயுக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் காலை 10 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

லாரியை ஓட்டிய முதியவர் அந்த வாகனத்திலிருந்து வெளியே வர கிராப்ஃபூட் உணவு விநியோக ஓட்டுநர் ஒருவர் உதவினார். விபத்துக்குள்ளான லாரிக்குள் அந்த முதியவர் சிக்கிக்கொண்டதாக ஷின்மின் நாளிதழிடம் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

லாரி மீது ஏறி அந்த முதியவரைப் பயணிகளுக்கான இருக்கையின் பக்கம் இருந்த சன்னல் வழியாக வெளியே கொண்டு வர கிராப்ஃபூட் உணவு விநியோக ஓட்டுநர் ஒருவர் முயன்றதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் சன்னலைத் திறக்க முடியாமல் போக, கண்ணாடியைத் தமது கைகளால் உடைக்க அவர் முயன்றதாக நேரில் பார்த்தவர் கூறினார். ஆனால் கண்ணாடியை அவரால் உடைக்க முடியவில்லை என்றும் அதனால் பக்கத்தில் இருந்த கட்டுமானத் தளத்துக்கு விரைந்து மண் வெட்டி ஒன்றைக் கொண்டு வந்த கண்ணாடி அவர் உடைத்து லாரி ஓட்டுநரைக் காப்பாற்றியதாகக் கூறினார்.

லாரி ஓட்டுநரை இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

விபத்து குறித்து போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.