கடலில் மாயமான சிங்கப்பூரர்களின் 'காயாக்' படகு கண்டுபிடிப்பு

கடலில் மாயமான சிங்கப்பூரர்களின் 'காயாக்' படகு கண்டுபிடிப்பு

1 mins read
bc04b663-96d4-4958-8d17-7153302ac27e
-

ஜோகூரின் மெர்சிங்கிற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் காணாமல் போன இரண்டு படகோட்டிகளின் பச்சை நிற 'காயாக்' படகுகளை மீனவர் ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார். ஆயினும், அந்தப் படகோட்டிகளான 62 வயது திரு டான் எங் சூனும் 57 வயது திருவாட்டி புவா கியோக் டின்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

குவாந்தான் கரையோரத்தில் அந்தப் படகுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ்ட் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது. அந்தக் கரையோரம் மெர்சிங்கிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிகமாக உள்ளது.