கல்வி அமைச்சு: 2020ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணைகள்

கல்வி அமைச்சு: 2020ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணைகள்

1 mins read
884f7b4f-82ac-4da6-804d-67d2d0b70877
-

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கான கல்வி ஆண்டு 2020இல் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 20ஆம் தேதி நிறைவடையும் என்று கல்வி அமைச்சு இன்று தெரிவித்தது. தொடக்கக் கல்லூரியிலோ மில்லெனியா கல்வி நிலையத்திலோ முதல் ஆண்டு தொடங்கவுள்ள மாணவர்கள், பிப்ரவரி மாதம் 5ஆம் தேதியன்று தொடங்குவர். ஜனவரி மாதத்தின் இடைப்பகுதியில் சாதாரண நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதால் இவர்கள் பள்ளி தொடங்கும் நாள் இவ்வாறு அமைந்துள்ளது.

இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஜனவரி மாதம் 6ஆம் தேதியன்று தொடங்குவர். மொத்தம் 11 பொது விடுமுறை நாட்களைத் தவிர, மூன்று பள்ளி விடுமுறை நாட்களான இளையர் தினம், சிறுவர் தினம், ஆசிரியர் தினம் ஆகியவையும் அனுசரிக்கப்படும்.