திங்கட்கிழமை இரவு மரினா ஈஸ்ட்டில் ஏற்பட்ட தீ, இரண்டு காற்பந்து திடல்களின் பரப்பளவுக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அருகே மூண்ட இப்பெரும் தீச்சம்பவம் குறித்து இரவு 8.50 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. மரினா ஈஸ்ட் டிரைவிலுள்ள செடிப் பகுதியில் ஏற்பட்ட தீயை வீரர்கள் 10.30 மணியளவில் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கிட்டத்தட்ட 50 தீயணைப்பாளர்களும் 12 தீயணைப்பு அவசர வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயால் ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிட்டனர்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

