கழிவறையில் பெண்ணைக் காணொளி எடுத்த இளையர்

கழிவறையில் பெண்ணைக் காணொளி எடுத்த இளையர்

1 mins read

சமூக மன்றக் கழிவறைக்குச் சென்ற பெண்ணைக் காணொளி எடுத்த குற்றச்சாட்டை நேற்று 16 வயது முகம்மது நூர் ஹைக்கல் ஷஸாலி ஒப்புக்கொண்டார்.

ஈராண்டுக்கு முன் செங்காங்கில் உள்ள 'எங்கர்வேல்' சமூக மன்றத்தின் கழிவறைக்குள் 20 வயது பெண் செல்வதைப் பார்த்த ஹைக்கல், உள்ளே சென்று தன் கைபேசியில் காணொளி எடுக்கத் தொடங்கினான். அத்துடன் இவ்வாண்டு 'ஷெங் சியோங்' கடையிலிருந்து ஒரு மதுபானப் புட்டியையும் திருடினான். இவற்றின் தொடர்பில் அடுத்த மாதம் தண்டனை விதிக்கப்படும்.