பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு குறைந்தது

சிங்கப்பூர் இவ்வாண்டுக்கான அதன் பொருளியல் வளர்ச்சியின் முன்னுரைப்பை குறைத்துள்ளது. உலகளாவிய வர்த்தகப் பதற்றநிலை, சிரமப்படும் உற்பத்தித் துறை ஆகியவை காரணமாக இரண்டாம் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி காணாததே இதற்குக் காரணம்.

பொருளியல் வளர்ச்சிக்கான முன்னுரைப்பு குறைக்கப்படுவதாக வெளியாகி உள்ள செய்தி ஏமாற்றம் அளித்தாலும் உலகளாவிய வர்த்தகம் சிங்கப்பூரை வெகுவாகப் பாதிக்கும் என்பதால் இந்த முன்னுரைப்பு யதார்த்த நிலையைப் பிரதிபலிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் எதிர்வரும் மாதங்களில் தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் பொருளியல் மந்தநிலை ஏற்படுவது குறித்து நிபுணர்களின் நிலைப்பாடு மாறுப்பட்டு உள்ளது.

சிங்கப்பூரின் முழு ஆண்டு பொருளியல் வளர்ச்சியை 0 விழுக்காட்டிலிருந்து 1 விழுக்காட்டுக்கு வர்த்தக, தொழில் அமைச்சு முன்னுரைத்துள்ளது.

இரண்டாம் காலாண்டில் புளூம்பர்க் ஆய்வில் பங்கெடுத்த நிபுணர்கள் முன்னுரைத்த 0.2 விழுக்காட்டைவிட சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 0.1 விழுக்காடாகப் பதிவாகியது.

2009ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 1.2 விழுக்காடு சரிவு கண்ட பிறகு இதுவே சிங்கப்பூர் இதுவரை கண்டிறாத ஆக மெதுவான பொருளியல் வளர்ச்சி.

காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில் பொருளியல் 3.3 விழுக்காடு சுருங்கியது. இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் பதிவான 3.8 விழுக்காடு வளர்ச்சிக்கு இது முற்றிலும் மாறப்பட்ட நிலையாகும்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் காரணமாக சிங்கப்பூரின் உற்பத்தித் துறை பாதிப்படைந்துள்ளது.

சிங்கப்பூர் அதன் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பைக் குறைத்திருப்பது வட்டார நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்கு எச்சரிக்கை விடுவதாக அமையும் என்று மேபேங்க் கிம் எங் பொருளியல் நிபுணர் சுவா ஹாக் பின் தெரிவித்தார்.

குறிப்பாக, உலகளாவிய மின்னணுவியல் பொருட்களுக்கான வர்த்தகத்தை நம்பியிருக்கும் நாடுகள் பாதிக்கப்படும் என அவர் கூறினார்.

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் மட்டுமல்லாது ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே உள்ள வர்த்தகப் பூசல், ஹாங்காங்கில் நிலவும் போராட்டங்கள் ஆகியவை சிங்கப்பூரின் பொருளியலைப் பாதிக்கும் என்றார் டாக்டர் சுவா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!