நீண்டகாலம் நீடித்திருக்கும் பகுதி-மின்கடத்திக்கான உலகளாவிய தேவையை நிறைவேற்றக்கூடிய நிலையில் சிங்கப்பூர் இருக்கிறது: ஹெங் சுவீ கியட்

நீண்டகாலம் நீடித்திருக்கும் பகுதி-மின்கடத்திக்கான உலகளாவிய தேவையை நிறைவேற்றக்கூடிய நிலையில் சிங்கப்பூர் இருக்கிறது: ஹெங் சுவீ கியட்

1 mins read
ea4abf39-8545-49ee-8dc7-0c9a1023cd7a
-

பகுதி-மின்கடத்திகளுக்கான உலகளாவிய தேவையை நிறைவேற்றக்கூடிய நிலையில் சிங்கப்பூர் இருப்பதாகவும், இந்தத் தேவை நீண்டகாலத்தில் வலுவாக நீடித்திருப்பதாகவும் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் கூறியிருக்கிறார்.

மைக்ரான் தொழில்நுட்ப நிறுவனத்தின் விரிவுபடுத்தப்பட்ட உற்பத்தி ஆலையை நார்த் கோஸ்ட் டிரைவில் புதன்கிழமை (ஆகஸ்ட் 14) திறந்துவைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

முப்பரிமாண திடீர் நினைவக (3D Nand) தொழில்நுட்ப மாற்றங்களைத் தொடரவும், ஆய்வு மேம்பாட்டு ஆற்றலை விரிவுபடுத்தவும் நிறுவனத்தின் விரிவாக்கம் துணை புரியும். இந்த விரிவாக்கத்தால் சிங்கப்பூரில் 1,000க்கும் மேலான புதிய வேலைகள் உருவாகும். தற்போது நிறுவனத்தில் சுமார் 8,000 பேர் வேலை செய்கின்றனர்.

அண்மையில் வெளியான முன்னுரைப்புகளின்படி, உலகளாவிய தேவை 2020ல் அடக்கமான வளர்ச்சிக்குத் திரும்பக்கூடும் என்றும், அதற்கடுத்த சில ஆண்டுகளில் இந்தத் தேவை 2 முதல் 9 விழுக்காடு வரை வளர்ச்சி அடையக்கூடும் என்றும் திரு ஹெங் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் பகுதி-மின்கடத்தி தொழில்துறையில் சுமார் 35,000 பேர் வேலை செய்கின்றனர்.

மைக்ரான் நிறுவனம் 1998 முதல் சிங்கப்பூரில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 15 பில்லியன் டாலருக்கு (20 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மேலாக நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.

பகுதி-மின்கடத்திகளுக்கான உலகளாவியத் தேவையை நிறைவேற்றக்கூடிய நிலையில் சிங்கப்பூர் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு ஹெங், எதிர்வரும் காலத்தில் பகுதி-மின்கடத்தி மையமாகத் திகழ முற்படவேண்டும் என்று சொன்னார்.