முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அரசதந்திரி காலமானார்

சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசதந்திரியுமான ஜோசப் பிரான்சிஸ் கன்சிசியோவ் தன்னுடைய 95வது வயதில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். 

அவர், 1968 முதல் 1984 வரை காத்தோங் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் பணியாற்றி இருக்கிறார். இதர அரசாங்க அமைப்புகளிலும் தொண்டாற்றி இருக்கிறார். 

மாஸ்கோ, ஜகார்த்தா, ஆஸ்திரேலியாவுக்கான  சிங்கப்பூர் தூதராக அவர் பணியாற்றினார்.

பல மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்த திரு கன்சிசியோவ், அர்ப்பணிப்புமிக்க ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அவருக்கு அனிதா என்ற மனைவியும் 3 பிள்ளைகளும்  உள்ளனர்.