நண்பரின் மகள்களுக்கு பாலியல் கொடுமை: ஆடவருக்கு சிறை

நண்பரின் இரு புதல்விகளை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தியதற்காக 59 வயது ஆடவருக்கு நேற்று 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  

ஆடவரின் பெயரை வெளியிட முடியாது. மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பாலியல் தொடர்பான இதர ஏழு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. 

தன்னுடைய மனைவியை விவாகரத்துச் செய்ததற்குப் பிறகு 2011ல் அந்தப் பெண்களின் வீட்டிலேயே அவர் தங்கத் தொடங்கினார்.   

சிறுமிகளுக்கு ஒன்பது வயது ஆனது முதல் பல ஆண்டு காலம் அவர் சிறுமிகளை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தினார். மூத்த பெண் தனக்கு நேர்ந்தவற்றை வெளியே சொன்னதை அடுத்து 2017ல் அவருடைய குற்றச்செயல்கள் அம்பலமாயின.