கூட்டுரிமை வீடு மறுவிற்பனை விலை ஜூலையில் இறக்கம்

சிங்கப்பூரில் கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகள் மற்றும் அடுக்குமாடி வீடுகளின் மறுவிற்பனை விலை தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஜூலையில் இறக்கம் கண்டது. அதேவேளையில், கைமாறிய வீடுகளின் அளவு ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு அதிகரித்து 882 ஆகியது. எஸ்ஆர்எக்ஸ் பிராப்பர்டி நிறுவனம் வெளியிடும் மாதாந்திர புள்ளிவிவரங்கள் மூலம் இந்த நிலவரம் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகளின் மறுவிற்பனை விலை ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலையில் 0.5% குறைந்தது.

அண்மைய மாதங்களில் புதிய பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொள்முதல் காரர்களுக்குப் போட்டி அதிகரித்து இருக்கிறது. இதனால் சில விற்பனையாளர்கள் வீடு மறுவிற்பனை விலையைக் கொஞ்சம் குறைத்துள்ளதாக ஆரஞ்ச் டீ அண்ட் டை நிறுவன ஆய்வு, ஆலோசனைப் பிரிவு தலைவர் தெரிவித்தார்.