$39.6 மில்லியன் விலையில் வரிசை வீடுகள் விற்பனை

கம்போங் பாரு ரோட்டில் உள்ள ஆறு பழமைப் பாதுகாப்பு கடைவீடுகள் விற்பனைக்கு வந்து இருக்கின்றன. ஒரு   வீட்டின் விலை சுமார் $6.6  மில்லியன். ஆறு வீடுகளையும் சேர்த்து வாங்கினால் $39.6 மில்லியன் என்று ஜேஎல்எல் அண்ட் துஸ்கானி ரியாலிட்டி என்ற சந்தைத் துறை நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

ஊட்ரம் எம்ஆர்டி நிலையம் அருகே கம்போங் பாரு ரோட்டில் 69, 71, 73, 75, 77 மற்றும் 79 எண்ணில் உள்ள வில்லங்கமில்லாத அந்த ஆறு இரண்டுமாடி கடைவீடுகளையும் தனியாக அல்லது மொத்தமாக விற்கமுடியும். இந்தச் சொத்தை வெளிநாட்டுக்காரர்களும் வாங்கலாம். கொள்முதல்காரர்களுக்குக் கூடுதல் முத்திரை வரியோ விற்பனையாளர்களுக்கான முத்திரை வரியோ இருக்காது என்று சந்தைத் துறை நிறுவனம் தெரிவித்துள்ளது.