'காஃபி பீன்' உணவகத்தில் சவரம் செய்த ஆடவர்

'கேஃபே' உணவகங்களில் பலர் தங்களுக்கு பிடித்த  பானங்களை ருசித்தவாரு  கதைப் புத்தகங்களை படிப்பது, பள்ளி பாடங்களைச் செய்வது, தையல் வேலைகளை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப் பார்ப்பது வழக்கமான காட்சி.

ஆனால், சற்று வித்தியாசமாக 'காப்பி பீன் ஆன்ட் டீ லீவ்' எனும் உணவகத்தில் அமர்ந்து  சவரம் செய்த ஆடவரின் செயல் பொதுமக்களிடையே சர்ச்சையை கிளப்பியது.

இம்மாதம் 7ஆம் தேதி காலாங் வேவ்வில் நடந்த இச்சம்பவத்தை பற்றி 'ஸ்டாம்ப்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த  கிம் அக்கடையில் 10.30 மணிக்கு இருந்ததாக கூறினார்.

"அந்த ஆடவர் கேட்டதை போல் அங்குள்ள பணியாளர் அவருக்கு    ஐஸ் கட்டிகள் நிறைந்த ஒரு 'கப்'பை கொண்டு வந்தார். ஆனால் அவர் செய்துகொண்டிருந்ததை அப்பணியாளர் நிறுத்தவில்லை," என்றார் கிம்.

தமது முகத்தில் இருந்த முடியை சரவம் செய்துகொண்டிருந்த அந்த ஆடவர் ஐஸ் கட்டிகளைக் கொண்டு வந்த அப்பணியாளரிடம் நன்றி தெரிவித்த பின் தொடர்ந்து சவரம் செய்ய தொடங்கினார்.

" ஏழு நிமிடங்களுக்கு  சவரம் செய்துகொன்டிருந்ததை கண்ட பொதுமக்கள் அருவருப்பு அடைந்ததை பொருட்படுத்தாமல் அந்நடவடிக்கையில் தொடர்ந்து  ஈடுபட்டார்," என்றும் அவர் கூறினார்.

சவரம் செய்துகொண்டிருந்த அந்த ஆடவரின் முடி தரையில் விழுந்ததைக் கண்டு அருவருப்பான கிம் அவரது அசுத்த செயல்களை தட்டிக் கேட்டபோது அந்த ஆடவர் எதையும் பொருட்படுத்தாமல் இருந்ததாக குறிப்பிடப்பட்டது.

இவரது அசுத்த செயலைக் கண்டிக்கும் வகையில் இச்சம்பவத்தை படம்பிடித்த கிம்மின் காணொளி வெளியிடப்பட்டுள்ளது

அந்தக் காணொளியை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்.

https://stomp.straitstimes.com/singapore-seen/man-openly-shaves-face-at-kallang-wave-mall-cafe-it-was-disgusting