பசுமைக்கு இடையே படபடக்கும் பட்டாம்பூச்சிகள்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைப் பாதையில் புதிதாக சிறகுகளை விரித்துள்ளன இந்த ஊதா நிற வண்ணத்துப்பூச்சிகள். சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள இவ்விடத்தில் இப்புதிய நவீன கலைச் சிற்பமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,200 ஊதா, ‘அடர்சிவப்பு’ நிற பட்டாம்பூச்சிகள் பொருத்தப்பட்டுள்ளன. அலுமினிய உலோகம் மீது ஒட்டப்பட்டுள்ள இப்பட்டாம்பூச்சிகள், வீசும் காற்றுக்கு ஏற்ப வளைவாக அசைகின்றன. 4.5 மீட்டர் உயரத்தில் நிற்கும் இந்தக் கலை வடிவம், கணிதத்தில் எல்லையற்ற எண்ணைக் குறிக்கும் ‘இன்ஃபினிட்டி’ சின்னம்.