பல்கலைக்கழக நிகழ்வில் தகாத நடத்தை குறித்து விசாரணை 

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் தகாத நடத்தையில் ஈடுபட்டதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் தகாத சைகைகளுடன் தகாத சொற்களையும் உரத்த குரலில் கோஷமிட்டவாறு அமைந்த காணொளி ஒன்று இன்ஸ்டகிராமில் வலம் வந்ததில், தகவல் கிடைத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.