அங் மோ கியோ நகைக்கடையில் $100,000 மதிப்பில் கொள்ளை  

அங் மோ கியோவில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று முன்தினம் கொள்ளையடிக்கப்பட்டதில் சந்தேக நபர் கிட்டத்தட்ட $100,000 மதிப்புள்ள பொருட்களுடன் தப்பினார்.

அங் மோ கியோ அவென்யூ 10, புளோக் 574ல் உள்ள ஹாக் சியோங் ஜேட் & ஜூவல்லரி நகைக்கடைக்கு வெளியே, நேற்று முன்தினம் மாலை நான்கு மணியளவில் கறுப்பு ஆடை அணிந்த, 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரைப் பார்த்ததாக பக்கத்து கடையின் உரிமையாளர் கூறினார்.

நகைக்கடை உரிமையாளர்களில் ஒருவர் “தோலோங், தோலோங் (உதவுங்கள், உதவுங்கள்), எங்கள் பொருட்களை எடுக்காதீர்கள்!” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது தம் காதில் விழுந்ததாகக் கூறினார். கறுப்பு ஹெல்மெட் அணிந்திருந்த சந்தேக நபர், நீல நிற ஜாக்கெட், கறுப்பு கால்சட்டை அணிந்து கையில் கறுப்பு பை ஒன்றையும் ஏந்தியிருந்தார். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஆயுதம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தால் போலிசாரை அணுகுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம்.  படம்: சாவ் பாவ்

07 Dec 2019

பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்

உரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 Dec 2019

பகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு

கூகல் வரைபடத்திலிருந்து எடுக்கப்பட்டது.

07 Dec 2019

ராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் நாளை மூடப்படும்