மது அருந்தி வாகனமோட்டிய நடிகரின் உறவினர் மீது குற்றச்சாட்டு  

மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியதன் தொடர்பில் பிரபல ஹாலிவுட் திரைப்பட நட்சத்திரமான ஜார்ஜ் குளூனியுடைய மனைவியின் அக்கா, சிங்கப்பூரில் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். 

இவ்வாண்டு மே 14ஆம் தேதியன்று ஹாலந்து சாலையில் அதிகாலை 2.30 மணியளவில் வாகனம் ஓட்டிச் சென்றபோது டாலா அலாமுட்டின் லெ டல்லெக், 47, அதிகாரிகளால் அவர் நிறுத்தப்பட்டார். சுவாசப் பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட மதுபான அளவைவிட மும்மடங்கு உள்ளதென தெரியவந்தது.

அத்துடன் சிங்கப்பூரின் ‘கிளாஸ் 3’ வாகனமோட்டும் உரிமம் இன்றி கார் ஓட்டியது, காப்புறுதி இன்றி வாகனம் ஓட்டியது, வாகன உரிமையாளரின் அனுமதியின்றி காரைப் பயன்படுத்தியது ஆகியவற்றின் தொடர்பிலும் லெ டல்லெக் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. தற்போது $5,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரின் வழக்கு விசாரணை மீ்ண்டும் அடுத்த மாதம் 19ஆம் தேதியன்று தொடரும்.