விபத்தில் 54 வயது பெண் மரணம்; ஓட்டுநர் கைது

தாமான் ஜூரோங் வட்டாரத்தில் நேற்று மாலை நடந்த சாலை விபத்தில் 54 வயது பெண் மரணமடைந்தார்.

விபத்தில் வேன் சம்பந்தப்பட்டுள்ளது. அதன் 33 வயது ஓட்டுநர் கவனக்குறைவால் மரணம் விளைவித்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹோ சிங் சாலைக்கும் கார்ப்பரேஷன் சாலைக்கும் இடையிலான சாலை சந்திப்பில் நேற்று மாலை 3.30 மணியளவில் விபத்து நடந்ததாகக் கூறப்பட்டது. 

சம்பவ இடத்திலேயே பெண் மாண்டதாகவும் விபத்து எப்படி நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.