பெண்களின் உள்ளாடைகளை நுகரும் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய ஆடவர் கைது

சுவா சூ காங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் கட்டடத்தில், பெண்களின் உள்ளாடைகளைத் தான் நுகர்வதைக் காட்டும் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதற்காக 34 வயது ஆடவர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) கைது செய்யப்பட்டார். 

ஆடவரின் மூன்று இன்ஸ்டாகிராம் பதிவேற்றங்கள் பற்றி வியாழக்கிழமையன்று பற்பல புகார்கள் கிடைத்ததாக போலிசாரின் அறிக்கை தெரிவித்தது. கட்டடத்தின் பொது நடைவழியில் ஆடவர் இந்தக் கீழ்த்தரமான செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. 

ஆடவரின் இன்ஸ்டாகிராம் பதிவேற்றங்களின் புகைப்படங்கள் வியாழக்கிழமை மாலை இணையத்தில் வலம் வந்தன. 

ஆடவரை அடையாளம் கண்ட ஜூரோங் போலிஸ் பிரிவு அதிகாரிகள், பொதுத் தொல்லை குற்றத்திற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஆடவரைக் கைது செய்தனர். 

ஆடவரின் பதிவேற்றங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக போலிசார் தெரிவித்தனர். 

ஆடவர்மீது சனிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், $1,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.