கள்ள சிகரெட் சிக்கியது

தீர்வை செலுத்தப்படாத மொத்தம் 138 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளும் 270 பாக்கெட் சிகரெட்டுகளும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வாகனம் ஒன்றின் கூரையில் ரகசிய பகுதியில் இருந்து கடந்த  செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. 

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை தெரிவித்தது. அந்த வேனை ஓட்டிவந்த மலேசியாவைச் சேர்ந்த 36 வயது நபர், மேல்விசாரணைக்காக  சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் அனுப்பப்பட்டார்.    

மலேசியாவில் பதியப்பட்ட அந்த வேன் பறிமுதலாகும் வாய்ப்பு இருப்பதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.