ஜூரோங் வெஸ்ட் தீச்சம்பவம்; மருத்துவமனையில் நால்வர்

ஜூரோங் வெஸ்ட் தீச்சம்பவம்; மருத்துவமனையில் நால்வர்

1 mins read
d6258a39-f88b-4c29-af68-8a11a08c2233
-

ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்திலுள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் தீச்சம்பவம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யங் லோ ரோட்டிலுள்ள புளோக் 158ன் ஐந்தாம் மாடி வீட்டில் நடந்த இச்சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணிக்குத் தகவல் கிடைத்தது.

நீர்ப்பாய்ச்சும் குழாய்களுடன் அதிகாரிகள் தீயை அணைத்தனர்.

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.