காதலியைக் கொன்று, எரித்த ஆடவருக்கு ஆயுள் தண்டனை

காதலியைக் கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை எரித்த சலவை நிலைய மேலாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. லெஸ்லி கூ குவீ ஹாக், 51, என்ற அந்த ஆடவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி சீன நாட்டவரான திருவாட்டி சுய் யஜி, 31, எனும் பொறியாளரைக் கொலை செய்த குற்றச்சாட்டு சென்ற மாதம் நிரூபிக்கப்பட்டது. கரையோரப் பூந்தோட்டங்களுக்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத சாலைப் பகுதியில் தமது காரில் வைத்து திருவாட்டி சுய்யை அவர் கொன்றதாகக் கூறப்பட்டது.

அதன்பின் சில நாட்களுக்குப் பிறகு லிம் சூ காங் லேன் 8ல் வைத்து அவரது சடலத்தை எரித்ததை கூ ஒப்புக்கொண்டார். திருவாட்டி சுய்யின் முடிக்கற்றை, எரிந்த ஆடையின் சில துண்டுகள், மார்புக் கச்சையின் ஒரு கொக்கி தவிர மற்ற அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின. தாம் கொடுத்த $20,000 திருவாட்டி சுய் திரும்பக் கொடுக்குமாறு கூவை வற்புறுத்தி வந்தார். இதை

அடுத்து, அந்த நிதி நெருக்கடியில் இருந்து விடுபட திருவாட்டி சுய்யைக் கொன்றொழிப்பதே வழி என கூ முடிவு செய்ததாகக் கூறப்பட்டது. ஆயினும், திருவாட்டி சுய்யைக் கொல்ல கூ திட்டமிட்டார் என்பதை சான்றுகள் காட்டவில்லை என நீதிபதி ஆட்ரி லிம் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த நாளன்று, தமது முதலாளியிடம் சென்று முறையிட திருவாட்டி சுய் திடீரென முடிவு செய்ததை கூ முதலில் அறிந்திருக்கவில்லை என்றும் அது தெரியவந்ததும் அவரை வலியுறுத்தி அம்முடிவைக் கைவிடச் செய்ய கூ விரும்பியதாகவும் நீதிபதி சொன்னார்.

அதன்பின் ஜூ கூன் எம்ஆர்டி நிலையத்தில் அவரை இடைமறித்த கூ, அவரைச் சமாதானப்படுத்துவதற்காக ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. கூ தமது பிஎம்டபிள்யூ காரில் வைத்து திருவாட்டி சுய்யை கழுத்தை நெரித்ததையடுத்து, அவர் சுயநினைவை இழந்தார். ஆயினும், உதவிக்கு வேறு எவரையும் அழைக்காமல், திருவாட்டி சுய்யின் சடலத்தை அப்புறப்படுத்துவதிலேயே அவர் குறியாக இருந்ததாகச் சொல்லப்பட்டது.

கூவிற்கு மணமாகி, மகன் ஒருவரும் இருக்கிறார். 2015ல் கூ-சுய் இடையே உறவு மலர்ந்தது. ஆயினும் தமக்கு ஏற்கெனவே மணமாகிவிட்டதை கூ, திருவாட்டி சுய்யிடம் மறைத்துவிட்டார். அத்துடன், தான் பணியாற்றிய சலவை நிறுவனம் தமது குடும்பத்திற்குச் சொந்தமானது என்றும் பொய்யுரைத்தார். தங்கத்தில் $20,000 முதலீடு செய்யும்படி திருவாட்டி சுய்யை வற்புறுத்தி இணங்கச் செய்தார் கூ. அதையடுத்து, திருவாட்டி சுய் தமது பெற்றோரிடம் இருந்து கடன் வாங்கி, அந்தப் பணத்தை கூவிடம் கொடுத்தார்.

பின்னர் பணத்தைத் திருப்பித் தரும்படி திருவாட்டி சுய் நெருக்கவே, அவருடைய தந்தைக்கு $10,000 அனுப்பி வைக்கும்படி தமது முன்னாள் காதலியிடம் கூ கேட்டார். இதனிடையே, தன்னிடமிருந்து விலகி இருக்கும்படி ஃபேஸ்புக் வழியாக திருவாட்டி சுய், கூவிற்குச் செய்தி அனுப்பினார். அதைத் தொடர்ந்து, தம்மை ஏமாற்றிவிட்டதாக கூவின் மனைவி அவரிடம் சண்டையிட்டார்.

இதையடுத்து, 2016 ஜூலை 12ஆம் தேதி அதிகாலை நேரத்தில் தமது மேற்பார்வையாளரிடம் அழைத்துச் செல்வதாகக் கூறி, திருவாட்டி சுய்யை தமது காரில் ஏற்றிச் சென்றார் கூ. ஆனால், கரையோரப் பூந்தோட்டங்களுக்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார். பின் அவரது உடலைச் சலவைப் பைகளால் மறைத்து, இரவு முழுவதும் தமது காரை தமது கொண்டோமினியக் குடியிருப்பில் கூ நிறுத்தி இருந்தார். வேறு சில பெண்களுடன் தனக்குக் கள்ள உறவு இருந்ததை ஒப்புக்கொண்ட கூ, அதே நேரத்தில் திருவாட்டி சுய்யைத் தான் காதலிக்கவில்லை என மறுத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!