மின்ஸ்கூட்டரால் மோதி பாதசாரிகளுக்குக் காயம் விளைவித்த இளையர்கள் இருவர் நன்னடத்தைக் கண்காணிப்பில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டது. முகம்மது லுஃப்டி ஸாகிர் அப்துல் ரகுமான், 18, முழுநேர தேசிய சேவையாளரான யாப் தனபாடி, 19, ஆகிய இருவரும் மின்ஸ்கூட்டரை வேகமாக ஓட்டி, குழந்தைகளுக்குக் காயம் விளைவித்த குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, லுஃப்டி ஒன்பது மாத நன்னடத்தைக் கண்காணிப்பில் இருக்கவும் யாப் ஆறு மாத நன்னடத்தைக் கண்காணிப்பில் இருக்கவும் நீதிபதி ஆணை பிறப்பித்தார்.
மின்ஸ்கூட்டர் விபத்து: நன்னடத்தை கண்காணிப்பில் இளையர் இருவர்
1 mins read

