ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து நால்வர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
யுங் லோ ரோடு, புளோக் 158ல் உள்ள அந்த வீட்டில் தீப்பற்றியதாக நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. இதையடுத்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீ அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் காயமடைந்ததாகக் கூறப்படும் நால்வர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலும் இங் டெங் ஃபோங் மருத்துவமனையிலும் அனுமதிக்கப் பட்டனர்.
அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார். சமையலறை சன்னல் வழியாக தீயணைப்புப் படையினர் அவரை மீட்டனர். சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை வருகிறது.

