பாலர் பள்ளி கற்றல், கற்பித்தலின் தரத்தை உயர்த்துவதில் அரசாங்கம் முனைப்பு

பாலர் பள்ளிகளை ஏற்படுத்துவதில் கல்வி அமைச்சு முனைப்புடன் செயல்படுவதாக பிரதமர் லீ தமது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்தார். இப்போது வரை 24 பாலர் பள்ளிகளை அமைச்சு ஏற்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டதற்கிணங்க தரத்தை உயர்த்தும் நோக்குடன் அமைக்கப்பட்டு வரும் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

“மேலும், புதிய முன்மாதிரியையும் அமைச்சின் பாலர் பள்ளிகள் ஏற்படுத்தி உள்ளன. அதாவது, தொடக்கப்பள்ளியுடன் இணைந்த பாலர் பள்ளிகளாக அவை உருவா கின்றன.  அத்துடன் மூன்று அதிகாரத்துவ தாய்மொழிகளிலும் அவற்றில் பாடம் சொல்லித்தரப்படும். பாலர் பள்ளியின் கற்றலிலும் தரம் உயர்த்தப்படுவது அடுத்த நடவடிக்கை. பாலர்பருவ மேம்பாட்டுக்கான தேசிய கல்விக்கழகத்தை ஏற்படுத்துவதன் மூலம் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சியும் வாழ்க்கைத் தொழில் முன்னேற்றமும் கிடைக்கும். ஆசிரியத் தரத்தை உயர்த்த இது உதவும்,” என்றார் பிரதமர்.

Loading...
Load next