சிம்ஸ் அவென்யூவுக்கும் சிம்ஸ் வேக்கும் இடையிலான சாலை சந்திப்பில் ஒரு கார், டாக்சி ஒன்றுடன் மோதிக்கொண்டது. இந்த விபத்து நேற்றிரவு 7 மணிக்கு ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
காருக்குள் சிக்கிய ஓட்டுனரைக் குடிமைத் தற்காப்புப் படையினர் பின்னர் வெளியேற்றினர்.
காரில் இருந்த ஒருவரும் டாக்சியில் இருந்த மூவரும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த விபத்தைக் காட்டும் காணொளியை 'எஸ்ஜி ரோட் விஜிலாண்டே' என்ற ஃபேஸ்புக் பக்கம் பதிவேற்றம் செய்தது.

