முதல் முறையாக வீவகவின் புதிய, மறுவிற்பனை வீடுகளை வாங்குவோர், அதிக உதவிகளை எதிர்பார்க்கலாம். இதன் தொடர்பில் அடுத்த மாதம் பல்வேறு புதிய நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு மேலும் எப்படி உதவலாம் என்று தனது அமைச்சு ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பான தகவல்கள் அடுத்த மாதம் பகிர்ந்துகொள்ளப்படும் என்றார் அவர்.
இதற்கிடையே அரசாங்கம் அறிவிக்கவிருக்கும் புதிய மாற்றங்களால் அதிகமானோர் பலன் அடைவதற்காக வீவக வீட்டு விற்பனை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

