சிட்டி ஹார்வெஸ்ட் தேவாலய நிறுவனர் கொங் ஹீ சிறையிலிருந்து விடுதலை

சிங்கப்பூர்: சிட்டி ஹார்வெஸ்ட் தேவாலயத்தை நிறுவிய கொங் ஹீ, பல மில்லியன் வெள்ளி தேவாலய நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை முடிந்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) விடுதலையானார். 

திரு கொங் “தனது குடும்பத்தோடு, குறிப்பாக வயதான பெற்றோரோடு” நேரம் செலவிடுவதற்குச் சிறிது காலம் எடுத்துக்கொள்வார்” என தேவாலயத்தின் சபையும் மூத்த நிர்வாகமும் தேவாலய இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. திரு கொங்கின் 55வது வயதுக்கு ஒருதினம் முன்பாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

தேவாலய நிதியிலிருந்து 50 மில்லியன் வெள்ளியைத் தவறாகப் பயன்படுத்திய ஆறு தேவாலயத் தலைவர்களில் திரு கொங்குக்கே ஆக நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது மேல்முறையீட்டின்போது எட்டு ஆண்டுகாலச் சிறைத் தண்டனை மூன்றரை ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. 

திரு கொங் தனது தண்டனைக் காலத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள், நான்கு மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். சிறைக் கைதிகளுக்கு நன்னடத்தைக்காக மூன்றில் ஒரு பகுதி தண்டனைக்காலம் குறைக்கப்படுவது வழக்கம். திரு கொங் தவிர, தேவாலயத்தின் மற்ற தலைவர்களின் தண்டனைக்காலமும் குறைக்கப்பட்டது. அவர்களில் நால்வர் சிறையிலிருந்து விடுதலையாகிவிட்டனர். 

மூன்று ஆண்டுகளும் நான்கு மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சியூ எங் ஹான் சிங்கப்பூரிலிருந்து தப்பிச்செல்ல முயன்றதால், அவரது தண்டனைக் காலம் 13 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அவரே கடைசியாக விடுதலையாவார். 

 

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற மசெக மகளிர் அணியின் வருடாந்திர மாநாட்டில் திரு ஹெங் முக்கிய உரை நிகழ்த்தினார்.  சிங்கப்பூர் பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாற்றங்களைப் பரிந்துரைத்தல், அவர்களை சமூக நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்க ஊக்குவித்தல் போன்றவை மசெக மகளிர் அணியின் முக்கிய பணிகள் என்றும் திரு ஹெங் வலியுறுத்தினார்.

15 Sep 2019

‘மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கொள்கைகள் தொடரும்’

ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தின் மாதிரி வரைபடம். படம்: ஜேடிசி

15 Sep 2019

95,000 புதிய வேலைகள் உருவாக்கப்படலாம்