கார் சக்கரத்தில் கள்ள சிகரெட்

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் அதிகாரிகள், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடத்திய சோதனைகளில் ஒரு காரின் சக்கரங்களில் தீர்வை செலுத்தப்படாத 1,127 சிகரெட் பொட்டலங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதன் தொடர்பில் இரண்டு மலேசியர்களிடம் புலன்விசாரணை நடந்து வருகிறது என்று ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த ஆணையம் தெரிவித்துள்ளது. படம்: ஃபேஸ்புக்/ குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம்