உல்லாசக் கப்பலில் சென்ற முதியவரைக் காணவில்லை

‘ஜென்டிங் ட்ரீம்’ என்ற உல்லாசக் கப்பலில் ஆகஸ்ட் 4ஆம் தேதி சிங்கப்பூரைவிட்டு புறப்பட்டுச் சென்ற கோ ஹாய் பெங் என்ற 74 வயது ஓய்வு பெற்ற மின்சாரத்துறை ஊழியரைக் காணவில்லை. பினாங்கு, லங்காவி போன்ற பல இடங்களுக்கும் சென்றுவிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அந்த உல்லாசக் கப்பல் சிங்கப்பூர் திரும்பியபோதுதான் திரு கோ காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

அவருடைய உடமைகள் அனைத்தும் கப்பலில் அப்படியே இருந்தன. இது பற்றி சிங்கப்பூர், மலேசிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய கடல் அமலாக்கத் துறை அமைப்பு விழிப்பூட்டப்பட்டு இருக்கிறது. 

இதனிடையே, அந்தக் கப்பலில் இருந்த படச்சாதனங்கள், வெள்ளை நிறத்தில் ஓர் உருவம் கடலில் விழுந்ததைக் காட்டுகின்றன. அந்த உருவம் திரு கோவாக இருக்குமோ என்ற அச்சமும் தலைதூக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.