'மோசமான சூழ்நிலைக்குத் தயாராக இருக்க வேண்டும்'

'மோசமான சூழ்நிலைக்குத் தயாராக இருக்க வேண்டும்'

1 mins read

சிங்கப்பூர் எதிர்நோக்கும் பல சவால்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போரே வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் முக்கிய இடம்பிடித்தது. ஆனால் வர்த்தகப் போர் மட்டுமல்ல. தொழில்நுட்பம், நாணயம் உள்ளிட்ட துறைகளிலும் இரு பெரிய நாடுகளும் போட்டியிட்டு வருகின்றன என்று கலந்துரையாடலுக்கு தலைமையேற்று பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார். அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவும் லியான்ஹ சாவ்பாவும் இணைந்து கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன. வர்த்தகம், உற்பத்தி, மின்னிலக்கம் ஆகியவற்றில் எதுவாக இருந்தாலும் மோசமான சூழ்நிலைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று மேலும் திரு சான் சுன் சிங் வலியுறுத்தினார்.

"சவால்களை எப்படி சமாளிப்பது என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும், பின்னர் ஆக்ககரமான வகையில் நாம் பங்காற்ற வேண்டும்," என்று அமைச்சர் கூறினார்.