கண்ணாடி விழுந்து இறந்த குழந்தைக்கு இறுதிச் சடங்கு

கண்ணாடி விழுந்து இறந்த குழந்தைக்கு இறுதிச் சடங்கு

1 mins read

ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் கண்ணாடி விழுந்ததால் இறந்த 18 மாத பெண் குழந்தைக்கு நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றது.

நேற்றுக் காலை 6.00 மணியளவில் குழந்தையின் தாயாரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சம்பவ நடந்த அர்பன் ரெவிவோ கடைக்குச் சென்று பிரார்த்தனை செய்ததாகத் தெரிகிறது. பின்னர் மண்டாய் தகனச் சாலைக்குச் சென்ற அவர்கள் குழந்தைக்கு இறுதிச் சடங்கை நிறைவேற்றினர். சென்ற வெள்ளிக்கிழமை அன்று குழந்தையும் பெற்றோரும் சீனாவுக்குத் திரும்பவிருந்த சில மணி நேரத்துக்கு முன்பு ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் நிகழ்ந்த பரிதாப சம்பவத்தில் குழந்தை மீது முழுநீள கண்ணாடி உடைந்து விழுந்தது. இதில் மயக்கமடைந்த குழந்தை சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை இறந்துவிட்டது.