சிங்கப்பூரின் மூன்று பிரதான கல்லூரிகளில் விரைவில் பாலியல் வகுப்பு தொடங்கப்படவுள்ளது. இதில் பாலியலுக்கு இணங்குவது மற்றும் கல்லூரி வளாகத்தை மதிப்புடன் வைத்திருப்பது ஆகியவை குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும். இவ்வாண்டு கல்லூரி வளாகத்தில் பல தகாத செயல்கள் நடந்துள்ளதால் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஒரு சம்பவத்தில் தேசிய பல்கலைக் கழகத்தின் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவரான மோனிகா பே தாம் குளிக்கும்போது சக மாணவர் ஒருவர் காணொளி எடுத்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். இது ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் பொருமியிருந்தார்.
கல்லூரிகளில் பாலியல் பாடம்
1 mins read

