குற்றச்செயல் புரிந்தவர்கள் தண்டனைக் காலத்தைத் தொடங்க சாங்கி சிறை வளாகத்தில் காலடி எடுத்து வைத்ததும் விடுதலைக்குப் பிறகு அவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான மறுவாழ்வு பயிற்சிகள் தொடங்கிவிடுகின்றன. வழக்கமாக கைதிகள் விடுவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு மறுவாழ்வு திட்டங்கள் மேற்கொள்ளப்படும். ஆனால் தற்போது சிறையில் காலடி வைத்ததும் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளில் கைதிகள் ஈடுபடுகின்றனர். சிறைச்சாலையை கற்றல் இடமாக மாற்றும் சிங்கப்பூர் சிறைத் துறை சேவை திட்டத்தின் ஓர் அங்கமாக மறுவாழ்வு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சிறையில் உடனே தொடங்கும் மறுவாழ்வு நடவடிக்கைகள்
1 mins read

