தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் செம்பவாங் வீட்டில் தீ

தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் செம்பவாங் வீட்டில் தீ

1 mins read
4f931cdc-aabf-4a60-8d27-e63926a5a964
வீட்டின் வரவேற்பறையில் நடந்த தீச் சம்பவம். யாரும் காயமடையவில்லை. படம்: சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை -

செம்பவாங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தனிநபர் நடமாட்டச் சாதனத்தினால் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) தீ மூண்டது.

செம்பவாங் கிரசன்ட் புளோக் 364பி-ன் 12வது மாடி வீட்டில் தீப்பிடித்திருப்பதாக அதிகாலை சுமார் 5.10 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

வீட்டின் வரவேற்பறையில் மூண்ட தீயைக் குடிமைத் தற்காப்புப் படையினர் விரைவில் அணைத்தனர்.

இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

தனிநபர் நடமாட்டச் சாதனத்தில் மின்னேற்றிக் கொண்டிருந்தபோது தீ மூண்டதாக ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.