அடையாள அட்டை விவரத் திரட்டை ஒடுக்கும் விதிமுறைகள் செப்டம்பர் 1 அமலாக்கம்

அடையாள அட்டை விவரத் திரட்டை ஒடுக்கும் விதிமுறைகள் செப்டம்பர் 1 அமலாக்கம்

1 mins read
e5c9b859-8b26-4ce7-86b7-f97a5cb31dda
-

அடையாள அட்டை எண்களையும் மற்ற தேசிய அடையாள எண்களையும் சேகரிப்பது, பயன்படுத்துவது, வெளியிடுவது தொடர்பான கெடுபிடியான விதிமுறைகளுக்கு உட்பட நிறுவனங்களுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே எஞ்சியுள்ளது.

செப்டம்பர் 1 முதல், சட்டம் அனுமதிக்கும் சூழ்நிலைகள் தவிர, ஒருவரின் அடையாள அட்டையை எடுத்துவைத்துக் கொள்வதும் முழு எண்ணைச் சேகரிப்பதும் சட்டவிரோதமான செயலாகும் என தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) நினைவுபடுத்தியது.

பிறப்புச் சான்றிதழ் எண்கள், வெளிநாட்டு அடையாள அட்டை எண்கள், வேலை அனுமதிச்சீட்டு எண்கள் ஆகியவற்றுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். அடையாள அட்டைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததால், அதனை ஒடுக்கும் விதிமுறைகளை ஆணையம் சென்ற ஆண்டு அறிவித்தது.

அதிர்ஷ்டக் குலுக்கல் படிவங்கள், உறுப்பினர் விண்ணப்பப் படிவங்கள், கடைகளின் சலுகைத் திட்டங்கள் போன்றவற்றிற்கெல்லாம் அடையாள அட்டை எண்கள் சேகரிக்கப்பட்டு வந்தன.

புதிய விதிமுறைகளின்கீழ், நிறுவனங்கள் செப்டம்பர் 1 முதல் தேசிய அடையாள எண்களைச் சேகரிக்க முடியாது.