சிங்கப்பூர் தொழிலாளர் மேம்பாட்டு வாரியத்தை ஏமாற்றி $51,000 மோசடி செய்த இரண்டாவது குற்றவாளிக்குத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பு என அழைக்கப்படும் வாரியத்திற்கு எதிராக 2016ஆம் ஆண்டு இந்தக் குற்றச்செயல்கள் புரியப்பட்டன.
மொத்தம் $4,500 சம்பந்தப்பட்ட 19 ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளையும், நீதிக்குத் தடையாக இருந்த ஒரு குற்றச்சாட்டையும் 28 வயது இங் யொங் ஜிங் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
மீதித் தொகை சம்பந்தப்பட்ட மேலும் 187 குற்றச்சாட்டுகள், தீர்ப்பளிக்கும்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
இங்-கிற்கு உடந்தையாக இருந்த 28 வயது டே ஷெங் யாங்-கிற்குக் கடந்த மாதம் ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரும் இதே எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள மேலும் இருவரான 28 வயது ஜோஷுவா டான் ஜுன் லியாங், 27 வயது லிம் பியாவ் ஆகியோரின் வழக்குகளில் இன்னும் தீர்ப்பளிக்கப்படவில்லை.

