ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித் தொகை மோசடி: 2வது குற்றவாளிக்கு 15 மாத சிறைத் தண்டனை

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித் தொகை மோசடி: 2வது குற்றவாளிக்கு 15 மாத சிறைத் தண்டனை

1 mins read
75364969-6ce1-4613-913d-937ef8e63790
இங் யொங் ஜிங், 28 வயது, மொத்தம் $4,500 சம்பந்தப்பட்ட 19 மோசடிக் குற்றச்சாட்டுகளையும் நீதித் துறை நடவடிக்கைகளுக்கு வேண்டுமென்றே இடையூறாக இருந்த ஒரு குற்றச்சாட்டையும் இம்மாதம் 14ஆம் தேதி ஒப்புக்கொண்டார். படம்: எஸ்பிஎஸ் -

சிங்கப்பூர் ஊழியரணி மேம்பாட்டு வாரியத்தை ஏமாற்றி $51,000 மோசடி செய்த இரண்டாவது குற்றவாளிக்குத் நேற்று 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் என அழைக்கப்படும் அமைப்புக்கு எதிராக 2016ஆம் ஆண்டு இந்தக் குற்றச்செயல்கள் புரியப்பட்டன.

மொத்தம் $4,500 சம்பந்தப்பட்ட 19 மோசடிக் குற்றச்சாட்டுகளையும் நீதித் துறை நடவடிக்கைகளுக்கு வேண்டுமென்றே இடையூறாக இருந்த ஒரு குற்றச்சாட்டையும் 28 வயது இங் யொங் ஜிங் (படம்) இம்மாதம் 14ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.

மீதித் தொகை சம்பந்தப்பட்ட மேலும் 187 குற்றச்சாட்டுகளும் இவருக்கு தண்டனை விதிப்பதில் கவனத்தில் கொள்ளப்பட்டன.

இதேபோன்ற மோசடியில் ஈடுபட்ட மற்றொரு ஆடவரான 28 வயது டே ஷெங் யாங்கிற்குக் கடந்த மாதம் ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரும் இதே எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இந்த மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள மேலும் இருவரான 28 வயது ஜோஷுவா டான் ஜுன் லியாங், 27 வயது லிம் பியாவ் ஆகியோரின் வழக்குகளில் இன்னும் தீர்ப்பளிக்கப்படவில்லை.