அடுத்த ஆண்டு விலகவிருக்கும் டிஎஃப்எஸ் குழுமம்

அடுத்த ஆண்டு விலகவிருக்கும் டிஎஃப்எஸ் குழுமம்

1 mins read
c469edba-ce69-45da-a9eb-60e22313aa2f
சாங்கி விமான நிலையத்துடன் டிஎஃப்எஸ் நிறுவனம் கொண்டிருக்கும் குத்தகை ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிகிறது.  படம்: டிஎஃப்எஸ் குழுமம் -

சாங்கி விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மதுபானம், புகையிலை விற்பனை செய்து வரும் டிஎஃப்எஸ் குழுமம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் அங்கிருக்கும் அதன் கடைகளை மூடவிருக்கிறது.

சாங்கி விமான நிலையத்துடன் டிஎஃப்எஸ் நிறுவனம் கொண்டிருக்கும் குத்தகை ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிகிறது.

'டிஎஃப்எஸ்' குழுமம் தனது குத்தகைக் காலத்தை நீட்டிக்காததால் அது விட்டுச் செல்லும் இடத்தைப் பெறும் முயற்சியில் மற்ற நிறவனங்கள் இறங்கியுள்ளன.

சாங்கி விமான நிலையத்தில் கடைகளை அமைக்க மூன்று நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருப்பதாக அறியப்படுகிறது.

தென்கொரியாவின் 'தி ஷில்லா டியூட்டி ஃப்ரீ', 'லோட்டே டியூட்டி ஃப்ரீ' மற்றும் ஜெர்மனியின் 'கெபர் ஹைனமான்' ஆகிய நிறுவனங்கள் ஏலக் குத்தகையில் பங்கெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஏலக் குத்தகை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. சாங்கி விமான நிலையத்தில் மதுபானம், புகையிலைக் கடைகளை நடத்தும் புதிய நிறுவனம் நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.