உட்லண்ட்சில் காகிதச் சுருள்களுக்கு உள்ளே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 11,000க்கும் மேற்பட்ட பெட்டிகளில் இருந்த கள்ள சிகரெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் இம்மாதம் 23ஆம் தேதி காலை சுமார் 6.20 மணிக்கு 31 வயது மலேசிய ஆடவர் ஓட்டி வந்த மலேசியப் பதிவுபெற்ற லாரி ஒன்றைச் சோதனைக்கு அனுப்பினர்.
அந்த லாரியில் இருந்த காகிதச் சுருள்களுக்கு இடையே மொத்தம் 11,054 அட்டைப்பெட்டி மற்றும் 402 பாக்கெட் தீர்வைச் செலுத்தப்படாத சிகரெட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவற்றுக்குச் செலுத்தவேண்டிய மொத்த தீர்வை சுமார் $1,075,010 ஆகும். மொத்த ஜிஎஸ்டி வரி $78,610 ஆகும். லாரி ஓட்டுநர் கைதானார். அவரைச் சிங்கப்பூர் சுங்கத்துறை விசாரித்து வருகிறது.

