வழக்கறிஞருக்கு கட்டண ஏற்பாடு: கருத்துகளை நாடுகிறது அமைச்சு

வழக்கறிஞருக்கு கட்டண ஏற்பாடு: கருத்துகளை நாடுகிறது அமைச்சு

1 mins read

வழக்கறிஞர்களுக்கான உத்தேச நிபந்தனைக் கட்டண உடன்பாடு தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைச் சட்ட அமைச்சு நாடுகிறது. ஒரு கோரிக்கை வெற்றி பெறும்போது மட்டும் வழக்கறிஞருக்குக் கூடுதலாக ஒரு தொகை கிடைப்பதற்கான வாய்ப்பை அந்த உத்தேச உடன்பாடு ஏற்படுத்தித் தருகிறது.

அனைத்துலக மற்றும் உள்நாட்டு சமரச நடைமுறைகளில் அந்த உடன்பாடுகள் பரிசீலிக்கப்படும். பொதுமக்களுடன் கூடிய ஆலோசனைகள், ஆகஸ்ட் 27 முதல் வரும் அக்டோபர் 8 வரை இடம்பெறும். MLAW_CFA_Consultation@mlaw.gov.sg என்ற முகவரி மூலமாகவும் கருத்துகளைத் தாக்கல் செய்யலாம். சட்ட அமைச்சுக்கு அஞ்சல் வழியாகவும் கருத்துகளை அனுப்பலாம்.