சிங்கப்பூரில் சட்ட விரோதமானவை என்று வகைப்படுத்தப்பட்டு உள்ள மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்களை வைத்திருந்தது, விற்றது ஆகியவற்றுக்காக 17 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
வாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கருதப்படும் 'காய்னி' என்ற புகையிலை அவர்கள் விற்றதாக சுகாதார அறிவியல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இந்த ஆணையமும் போலிசும் லிட்டில் இந்தியாவிலும் ஜூரோங்கிலும் சோதனைகளை நடத்தின.
அந்தப் பொருட்களை விற்றவர்களில் இருவர் வருகையாளர் விசாவில் இருந்தவர்கள். அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சுமார் $42,000 மதிப்புள்ள 21,000க்கும் மேற்பட்ட புகையிலைப் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. கைதானவர்கள் புலன்விசாரணையில் உதவி வருவதாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.

