சாங்கி ஜுவல் சம்பவத்தில் இறந்த குழந்தையின் குடும்பத்துக்கு உதவ சட்ட நிறுவனம் உறுதி

சாங்கி ஜுவல் சம்பவத்தில் இறந்த குழந்தையின் குடும்பத்துக்கு உதவ சட்ட நிறுவனம் உறுதி

1 mins read

சாங்கி ஜுவல் விமான நிலையத்தில் கண்ணாடி விழுந்ததால் குழந்தை இறந்த சம்பவத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க குழந்தையின் குடும்பத்தினர் சட்ட நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சீனாவிலிருந்து திரும்பிய அந்த குடும்பத்தை பிரதிநிதிக்கும் ஆர்.எஸ். சாலமன் சட்ட நிறுவனத்தின் ரிச்சர்ட் சியாவ் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்படும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை சாங்கி ஜுவலில் உள்ள அர்பன் ரெவிவோ கடையில் முழு நீள கண்ணாடி உடைந்து விழுந்ததால் 18 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.