சூதாட்டக் கூடங்களில் பொறுப்புடன் சூதாடுவதற்கான நடவடிக்கைகளை சிங்கப்பூர் ஆராய்கிறது

சூதாட்டக் கூடங்களில் பொறுப்புடன் சூதாடுவதற்கான நடவடிக்கைகளை சிங்கப்பூர் ஆராய்கிறது

1 mins read
64c82777-ab22-4f0e-8796-740d2108eca3
சிங்கப்பூரில் உள்ள சூதாட்டக் கூடங்களில் ஒன்று. கோப்புப்படம் -

சிங்கப்பூரிலுள்ள சூதாட்டக் கூடங்களுக்குச் செல்வோர், அங்கு செலவிட்ட நேரம், பணம் பற்றி கூடிய விரைவில் தனிப்பட்ட எச்சரிக்கைகளைப் பெறக்கூடும்.

சூதாட்டம் ஒரு பிரச்சனையாக மாறுவதை ஒடுக்குவதற்காகப் பொறுப்புடன் சூதாட ஊக்குவிக்கும் முனைப்புகளில் இதுவும் ஒன்று என மனிதவள அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ இன்று கூறினார்.

தகுந்த முனைப்புகளை அறிமுகப்படுத்த, சிங்கப்பூரின் சூதாட்ட நிலையக் கட்டுப்பாட்டு ஆணையம், சூதாட்டக் கூடங்களுடன் சேர்ந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சூதாட்டக் கூடங்களுக்குச் செல்வோர் தாங்கள் செலவு செய்யக்கூடிய தொகைக்கும் நேரத்திற்கும் தாமாகவே முன்வந்து வரம்புகளை விதித்துக்கொள்வதும் முனைப்புகளில் உள்ளடங்கலாம்.

சூதாட்டக் கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் குற்றச்செயல் தொடர்பான ஐந்தாவது சிங்கப்பூர் மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளின் சட்ட ஒழுங்கு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் திருமதி டியோ உரையாற்றினார்