ஒருங்கிணைப்பு முயற்சிகளை ஆசியான் வலுப்படுத்தவேண்டும்: சான் சுன் சிங்

ஒருங்கிணைப்பு முயற்சிகளை ஆசியான் வலுப்படுத்தவேண்டும்: சான் சுன் சிங்

1 mins read
c26943ac-09bf-40fd-89d4-99943b2e4472
அமைச்சர் சான் சுன் சிங்க். கோப்புப்படம் -

ஆசியான் ஈர்ப்புமிக்கப் பொருளியல் பங்காளியாகத் திகழ்வதற்கு அதன் மையத்தன்மையை நிலைநாட்டி வலுப்படுத்துவதோடு, ஒருங்கிணைப்பு முயற்சிகளை இருமடங்காக்கவேண்டும் என்று வர்த்தகத் தொழில் அமைச்சர் சான் சுன் சிங் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) கூறினார்.

மண்டரின் ஓரியன்டல் ஹோட்டலில் நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலக விவகாரக் கழகத்தின் 12வது ஆசியான் மற்றும் ஆசியக் கருத்தரங்கில் உரையாற்றிய திரு சான், ஆசியானின் மையத்தன்மையை நிலைநாட்ட ஒவ்வொரு ஆசியான் நாடும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார். எதிர்ப்பில்லாத கொள்கைகளையும் நெருக்குதல்களையும் எதிர்த்தல், விதிமுறைகளின் அடிப்படையிலான செயல்முறைக்கு உட்படுதல், உறுப்பு நாடுகளுக்கு இடையில் பயன்மிக்க நம்பிக்கையை வளர்த்தல், அரசாங்கம் மாறினாலும் சவால்கள் எதிர்ப்படும்போது நிலை தடுமாறாமல் இருத்தல் ஆகியன அவற்றுள் அடங்கும்.

தீர்வையல்லாத இடையூறுகளை அவர் ஓர் எடுத்துக்காட்டாகக் கூறினார். இத்தகைய இடையூறுகளின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் இவ்வட்டாரத்தில் மும்மடங்கு அதிகரித்துள்ளன. தீர்வையை அகற்றுவதால் கிடைக்கக்கூடிய ஆதாயத்தை இந்த இடையூறுகள் அழித்துவிடக்கூடும் என்றார் அவர்.