சிங்கப்பூரின் பணக்காரர் ஸாங் யோங்; $19.17 பி. சொத்து

சிங்கப்பூரின் பணக்காரர் ஸாங் யோங்; $19.17 பி. சொத்து

1 mins read
c7a43c71-91c8-4887-9388-76426b27e305
சிங்கப்பூரர்களில் பணக்காரர்கள் பட்டியலில் US$13.8 பில்லியன் ($19.17 பில்லியன்) சொத்துகளுடன் முதலிடம் வகிக்கும் ஹைடிலாவ் நிறுவனத்தின் நிறுவனர்  ஸாங் யோங், படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்கப்பூரர்களில் பணக்காரர்கள் பட்டியலில் US$13.8 பில்லியன் ($19.17 பில்லியன்) சொத்துகளுடன் ஹைடிலாவ் நிறுவனத்தை நிறுவிய ஸாங் யோங், முதலிடத்தைப் பிடித்துள்ளதாக '2019 ஃபோர்ப்ஸ் சிங்கப்பூர் பணக்காரர் பட்டியலில்' தெரிவிக்கிறது.

'ஃபார் ஈஸ்ட் ஆர்கனைசேஷன்' நிறுவனத்தின் ராபர்ட் மற்றும் பிலிப் இங் இருவரும்தான் அந்தப் பட்டியலில் 10 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறார்கள். இப்போது இவர்களுக்கு இரண்டாவது இடம் கிடைத்து இருக்கிறது. இந்தச் சகோதரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு US$12.1 பில்லியன்.

'ஃபோர்ப்ஸ் ஆசியா' நிறுவனம் இந்த விவரங்களை அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. சீனாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முன்பு இடம்பெற்று வந்த திரு ஸாங், இப்போது சிங்கப்பூர் குடிமகனாக உள்ளார். அவருடைய நிறுவனம் உலகளவில் விரிவடைந்து வருவதாக ஃபோர்ப்ஸ் ஆசியா சுட்டிக்காட்டி இருக்கிறது.