உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் 2வது இடத்தில் சிங்கப்பூர்

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் 2வது இடத்தில் சிங்கப்பூர்

1 mins read
88df7838-9fb4-49fa-b10b-41a9bbd12346
'எக்கனாமிஸ்ட் இண்டலிஜன்ஸ் யூனிட்' என்ற அமைப்பின் பாதுகாப்பான நகர்கள் பட்டியல், ஐந்து கண்டங்களில் உள்ள 60 நாடுகளின் நகர்களை வரிசைப்படுத்தியுள்ளது. அதில் சிங்கப்பூர் உலகிலேயே மிகவும் பாதுகாப்புமிக்க நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தோக்கியோ முதலிடத்தில் உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் உலகிலேயே மிகவும் பாதுகாப்புமிக்க நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தோக்கியோ முதலிடத்தில் உள்ளது.

'எக்கனாமிஸ்ட் இண்டலிஜன்ஸ் யூனிட்' என்ற அமைப்பின் பாதுகாப்பான நகர்கள் பட்டியல், ஐந்து கண்டங்களில் உள்ள 60 நாடுகளின் நகர்களை வரிசைப்படுத்துகிறது.

மின்னிலக்கம், உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், தனிநபர் தகவல்கள் ஆகிய நான்கு பாதுகாப்புப் பிரிவுகளில் 50க்கும் மேற்பட்ட தரம் மற்றும் அளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அறிகுறிகளுக்கு ஏற்ப அந்த அட்டவணை உருவாக்கப்படுகிறது.

அவசரகால சேவைகள் எந்த வேகத்தில் கிடைக்கின்றன, பேரிடர் நிவாரண திட்டங்கள், இணையத் தாக்குதல்களுக்கு எதிராக உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டிருக்கும் ஆற்றல் உள்ளிட்ட புதிய நான்கு அம்சங்கள் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டன. உள்கட்டமைப்பு வசதி, தனிநபர் பாதுகாப்பு ஆகியவற்றில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கிறது.

மின்னிலக்கப் பாதுகாப்பில் இரண்டாவது இடத்திலும் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் எட்டாவது இடத்திலும் சிங்கப்பூர் உள்ளது. 2017ல் சுகாதார பாதுகாப்பைப் பொறுத்தவரையில் சிங்கப்பூர் 13வது இடத்தில் இருந்தது.