சிங்கப்பூரின் ஆகப் பழமையான நீர் சுத்திகரிப்பு ஆலை, புதிய தொழில்நுட்பங்களுடன் பெரும் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் குறைவான செலவில் நீரை சுத்திகரிக்கும் ஆற்றலை அது பெற்றுள்ளது.
சுவா சூ காங்கில் உள்ள அந்த மேம்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் சுற்றுப்புற நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கிராஞ்சி, பாண்டான், தெங்கா ஆகிய நீர்த்தேக்கங்களில் உள்ள நீரை சுவா சூ காங் ஆலை சுத்தி கரித்து வருகிறது.
$162 மில்லியன் செலவிலான மூன்று ஆண்டுகால மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மண்ணால் ஆன வடிகட்டிக்குப் பதிலாக 'செரமிக்' சவ்வு சேர்க்கப்பட்டுள்ளது. நீரில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்க கரிம வடிகட்டியும் பயன் படுத்தப்படுகிறது.
இதே 'செரமிக்' வடிகட்டி முறையைத்தான் நெதர்லாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள நீர் சுத்தி கரிப்பு நிலையங்களும் பயன்படுத்துகின்றன என்று தேசிய நீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.
தற்போது மேம்பாடு கண்டுள்ள சுவா சூ காங் ஆலை, உலகின் 'செரமிக்' வடிகட்டியைப் பயன்படுத்தும் ஆகப்பெரிய நீர் சுத்திகரிப்பு நிலையமாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாகியான இங் ஜூ ஹீ, "வீடு, நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவை யான நீரை நவீன முறையில் சுத்தி கரிக்க ேமம்படுத்தப்பட்ட சுவா சூ காங் ஆலை வகை செய்து உள்ளது," என்றார்.
பல ஆண்டுகாலமாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் சோதனைகளின் விளைவாக இது சாத்தியமானது என்றும் அவர் சொன்னார்.

