விமான நிலையத்தில் மனைவியை வழியனுப்புவதற்காக விமான நுழைவுச் சீட்டை வாங்கி உள்ளே சென்ற கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை விமான நுழைவுச் சீட்டை தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் போலிசார் தெரிவித்தனர்.
விசாரணையில் அவர் விமானத்தில் பயணம் செய்யும் நோக்கம் இல்லை என்பதும் மனைவியை வழியனுப்புவதற்காகவே பயணிகள் புறப்படும் பகுதிக்கு அவர் சென்றார் என்பதும் தெரிய வந்தது.
இவ்வாண்டு ஜனவரியிலிருந்து 33 பேர் விமான நுழைவுச் சீட்டைதவறாகப் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் நடைெபற்ற சம்பவத்தில் மக்காவிலிருந்து வந்த 42 வயது பெண் மீது விமான நுழைவுச் சீட்டை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் பொருள் சேவை வரியைப் பெறுவதற்காகவே விமான நிலையத்தில் நுழைந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

